உத்தர பிரதேசத்தில் மீரஜ் ரக போர் விமான டயர்களையே ஆட்டையை போட்ட திருடர்கள்..!

Scroll Down To Discover
Spread the love

உத்தரபிரதேச மாநிலம் லக்னோ மாவட்டம் பக்‌ஷிகாதலாப் பகுதியில் இந்திய விமானப்படையின் படைத்தளம் அமைந்துள்ளது.

இந்த விமானப்படைத்தளத்தில் இருந்து கடந்த 27-ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜோதாப்பூரில் உள்ள விமானப்படை தளத்திற்கு லாரி மூலம் ராணுவ உபகரணங்கள் கொண்டு செல்லப்பட்டன.

இந்நிலையில், லக்னோவில் உள்ள ஐஸ்யானா நகர் பகுதியில் லாரி சென்று கொண்டிருந்தபோது அதில் ஏறிய மர்மநபர்கள் விமானப்படைத்தளத்திற்கு கொண்டு செல்லப்பட்ட மீரஜ் ரக போர் விமானத்தின் டயர்களை திருடி சென்றுள்ளனர்.

இது தொடர்பாக ஐஸ்யானா நகர போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. விமானப்படை தளத்திற்கு ராணுவ உபகரணங்களை கொண்டு சென்ற லாரியில் இருந்து மீரஜ் ரக போர் விமானத்தின் டயர் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.