இரவல் வாங்கிச் சென்ற காரை அடகு வைத்த வாலிபர் கைது..!

Scroll Down To Discover
Spread the love

உறவினர் வீட்டு விசேஷத்திற்கு செல்வதாக கூறி இரவல் வாங்கிச் சென்ற காரை அடகு வைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை பைபாஸ் ரோடு ஸ்டேட் பேங்க் ஆபீஸர் காலனி 2-வது தெருவை சேர்ந்தவர் நம்பிராஜன் 32. இவருக்கு சொந்தமான காரை அழகப்பன் என்பவர் உறவினர் வீட்டு விசேஷத்திற்கு செல்வதாக கூறி இரவலாக வாங்கி சென்றார்.

பின்னர், அந்த காரை திருப்பி தரவில்லை. இந்த நிலையில் கார் உரிமையாளர் விசாரித்தபோது, அவருடைய காரை அவருக்குத் தெரியாமல் வேறொருவரிடம் அடகுவைத்தது தெரியவந்தது.

இதுகுறித்து, நம்பிராஜன் எஸ்.எஸ்.காலனி போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து அழகப்பன், பிரதீப் என்ற கிளிண்டன் மற்றும் பொன்மேனி குடியானவர் 2-வது தெருவைச் சேர்ந்த பிரகாஷ் மகன் அருண் பாண்டியன் 27. ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து அருண் பாண்டியனை கைது செய்தனர். மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.