பாதுகாப்பு உபகரணங்களின் உற்பத்தி; தமிழகத்தின் ராணுவ தளவாடங்கள் வழித்தடம் அமைப்பு

Scroll Down To Discover
Spread the love

நாடாளுமன்றத்தின் மக்களவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த பாதுகாப்பு இணை அமைச்சர் அஜய் பட் கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

இறக்குமதியை சார்ந்திருப்பதைக் குறைக்கும் நோக்கத்துடன், பாதுகாப்பு உபகரணங்களை உள்நாட்டிலேயே வடிவமைத்து உற்பத்தி செய்வதை ஊக்குவிப்பதற்காக அரசு பல கொள்கை முயற்சிகளை எடுத்து சீர்திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது.

-ராணுவ தளவாடங்கள் கொள்முதல் நடைமுறை-2020-ன் கீழ் உள்நாட்டு ஆதாரங்களிலிருந்து மூலதனப் பொருட்களை வாங்குவதற்கு முன்னுரிமை
-209 பொருட்களின் உள்நாட்டுமயமாக்கல் பட்டியல்கள் அறிவிப்பு
-நீண்ட கால தொழில்துறை உரிம செயல்முறையை எளிதாக்குதல்
– அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையின் தாராளமயமாக்கல்
-செயல்முறையை எளிதாக்குதல்
– ஸ்டார்ட்அப்கள் மற்றும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை உள்ளடக்கிய ஐடெக்ஸ் திட்டம்
-உத்தரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் தலா ஒன்று என இரண்டு பாதுகாப்பு தளவாடங்கள் வழித்தடங்களை நிறுவுதல் ஆகியவை இவற்றில் அடங்கும்.