கொரோனாவிலிருந்து குணமடைந்தார் நடிகர் கமல்ஹாசன் – மருத்துவமனை அறிக்கை

Scroll Down To Discover
Spread the love

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன், சமீபத்தில் அமெரிக்கா சென்று திரும்பினார். பின்னர், அவருக்கு லேசான இருமல் இருந்ததை அடுத்து, பரிசோதனை மேற்கொண்டதில், கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இதனையடுத்து அவர் சென்னை, போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தொடர் சிகிச்சையில் இருந்துவந்தார்.

இந்நிலையில் மருத்துவமனை தரப்பில் வெளியான அறிக்கையில், ‘நவ.,22ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கமல்ஹாசன் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தொண்டையில் லேசான தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்தது. தற்போது அவர் முழுமையாக குணமடைந்துள்ளார். டிச.,3ம் தேதி வரை அவர் தனிமைப்படுத்தி இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார். டிச.,4ம் தேதி முதல் அவர் வழக்கமான பணிகளை மேற்கொள்ளலாம்,’ எனக் கூறப்பட்டுள்ளது.