சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் மரணம் – மனித உரிமை ஆணைய விசாரணைக்கு தடை

Scroll Down To Discover
Spread the love

ராம்குமார் மரணம் குறித்து மனித உரிமை ஆணையம் விசாரிக்க இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நுங்கம்பாக்கம் சுவாதி கொலை வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் திடீரென மரணமடைந்தார். அவரது மரணம் தொடர்பாக தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் விசாரித்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் புழல் சிறை ஓய்வுபெற்ற கண்காணிப்பாளர், ராம்குமார் மரணத்தை தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரிக்க தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கு கடந்த சில நாட்களாக விசாரணை செய்யப்பட்டு வந்த நிலையில் சுவாதி கொலை வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார் மரணம் தொடர்பாக தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரிக்க தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ராம்குமார் தற்கொலை செய்த வழக்கில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மாநில மனித உரிமை ஆணையம் விசாரிக்க சட்டத்தில் இடம் இல்லை என்று கூறப்பட்டதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் டிசம்பர் 7ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளதாகவும் மனித உரிமை ஆணைய விசாரணைக்கு தடை விதித்து குறித்து ஆணையம் பதில் அளிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.