கோயில் நிலங்களுக்கு பட்டா வழங்கும் அரசாணையை அமல்படுத்த முடியாது – சென்னை ஐகோர்ட்.!

Scroll Down To Discover
Spread the love

அரசு புறம்போக்கு மற்றும் கோவில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசித்தவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. சட்டவிரோதமாக நிலங்களை ஆக்கிரமிப்பவர்களுக்கு உதவும் வகையில் இந்த அரசாணை பிறபிக்கப்பட்டுள்ளதால், அரசாணையை ரத்து செய்ய கோரி சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராதா கிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது:- அப்போது, கோயில் நிலங்களில் எவ்வளவு ஆக்கிரமிப்பில் உள்ளது என்ற விவரம் தெரியாமல்  பட்டா வழங்கும் அரசாணையை அமல்படுத்த முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்தது.

மேலும் அறநிலையத்துறை அதிகாரிகள் அரசின் ஊதுகுழலாகவும், பொம்மைகளாகவும் தான் இருக்கிறார்கள் என்று தெரிவித்த உயர்நீதிமன்றம், அரசாணை ஒரு மதத்திற்கான வழிபாட்டுதலங்களுக்கு மட்டும் தான் பொருந்துமா ? பிற மத தலங்களுக்கு கிடையாதா ?அரசாணை மூலம் கோயில் நிலங்களை விற்க அறநிலையத்துறையை அரசு வற்புறுத்துகிறதா ? என்றும் கேள்வி எழுப்பியது.இதையடுத்து வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.