டிசம்பர் 6-ம் தேதி இந்தியா வருகிறார் ரஷிய அதிபர் புதின்..!

Scroll Down To Discover
Spread the love

ரஷிய நாட்டின் அதிபர் விளாடிமிர் புதின் வருகிற 6-ந்தேதி (டிசம்பர்) இந்தியா வருகிறார். அப்போது பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

இருநாட்டு தலைவர்களின் பேச்சுவார்த்தையில் இருநாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து முக்கியம்சங்கள் இடம் பெறுகிறது.

தற்போது உலகளவில் நடைபெறும் முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்துவது முக்கியம்சமாக இடம்பெற இருக்கிறது. ஜி20, பிரிக்ஸ், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ஆகியவற்றில் இணைந்து பங்காற்றுவது குறித்தும் பேச்சுவார்த்தையில் இடம்பெறும் என இந்தியாவுக்கான ரஷிய தூதரகம் தெரிவித்துள்ளது.