மாநிலங்களுக்கு ரூ.95,082 கோடி வரி பங்கீட்டை விடுவித்த மத்திய அரசு..!

Scroll Down To Discover
Spread the love

மத்திய அரசு, வரி வருவாயை மாநிலங்களுக்கு பங்கிட்டு அளித்து வருகிறது. பல தவணைகளாக இது வழங்கப்படுகிறது. சமீபத்தில், மாநில அரசுகளுடன் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, உள்கட்டமைப்புகளை உருவாக்க மாநிலங்களின் கையில் பணம் புழங்க வேண்டும் என்பதற்காக, வரி பங்கீட்டு தொகை விடுவிக்கப்படும் என்று கூறினார்.

அதன்படி, மாநிலங்களுக்கு மத்திய அரசு நேற்று வரி பங்கீட்டு தொகையாக ரூ.95 ஆயிரத்து 82 கோடியை விடுவித்தது. 2 தவணைகளாக இத்தொகை விடுவிக்கப்பட்டது. இதனால், மாநிலங்களின் நிதிநிலைமை வலுப்படுவதுடன், அவற்றின் மூலதன செலவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தொகையில், உத்தரபிரதேசத்துக்கு அதிக அளவாக ரூ.17 ஆயிரத்து 56 கோடியே 66 லட்சம் கிடைத்துள்ளது. பீகாருக்கு ரூ.9 ஆயிரத்து 563 கோடியும், மத்தியபிரதேசத்துக்கு ரூ.7 ஆயிரத்து 464 கோடியும், மேற்கு வங்காளத்துக்கு ரூ.7 ஆயிரத்து 153 கோடியும், மராட்டிய மாநிலத்துக்கு ரூ.6 ஆயிரத்து 6 கோடியும் கிடைத்துள்ளது