முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி மீண்டும் வீட்டுக் காவலில் அடைப்பு..!

Scroll Down To Discover
Spread the love

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் மாவட்டத்தில் முன்னாள் முதல் மந்திரியும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெகபூபா முக்தி நேற்று மீண்டும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு உள்ளார்.

இதுதொடர்பாக மெகபூபா முப்தி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், மீண்டும் வீட்டுக்காவலில் உள்ளேன். கட்சியின் மூத்த நிர்வாகிகளான சாகிப், புக்காரி ஆகியோரும் கைதாகி உள்ளனர் என பதிவிட்டுள்ளார்.

ஹைதர்போரா என்கவுண்டரில் அப்பாவிகள் 2 பேர் பலியானதை கடுமையாக விமர்சித்ததன் எதிரொலியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது. முன்னதாக, ஹைதர்போரா என்கவுண்டர் விவகாரம் குறித்து நீதிபதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.