திருப்பதியில் கனமழை: ஏழுமலையான் கோவிலுக்குள் வெள்ளநீர் புகுந்தது- சாலை, நடைபாதை, மறு அறிவிப்பு வரும் வரை மூடல்..!

Scroll Down To Discover
Spread the love

திருப்பதி, திருமலையில் நேற்று முன்தினம் இரவில் இருந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள், தரிசனம் முடிந்து கோவிலில் இருந்து வெளியே வரும் பக்தர்கள் மழையில் சிரமப்பட்டனர். கோவிலை ஒட்டிய தெருக் கள், கடைகள், சாலைகள் மழை வெள்ளத்தில் மூழ்கின.

கோவில் முன்பாகவும், கோவில் அருகிலும் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கோவில் அருகில் உள்ள திருமலை நம்பி சன்னதியிலும் அதிகமாக தண்ணீர் வந்து ஆறு போல் ஓடியது.

இந்தநிலையில் திருப்பதி திருமலையில் கொட்டிய கனமழையால் 13 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனையொட்டி ஏழுமலையான் கோவிலுக்குச் செல்லும் சாலை மற்றும் நடைபாதை, மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக தேவஸ்தான் தெரிவித்துள்ளது.

தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை ஊழியர்கள் நிலச்சரிவு மற்றும் முறிந்து விழுந்த மரக்கிளைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மலைப்பாதைகளில் நிலச்சரிவை அகற்ற கிரேன்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.