மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட மத்திய சட்ட மன்ற உறுப்பினர் மாநில நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் தொகுதியில், அமைந்துள்ள மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 17-வது வார்டு எல்லிஸ் நகர் 70-வது பிரதான சாலையில், சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுகிறது.
பருவமழை தொடங்கும் முன்னே சாலைகள் அமைக்க மாநகராட்சிக்கு மாவட்ட நிர்வாகத்திற்கும் சமூக ஆர்வலரும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனர். எனினும், அதை கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சி நிர்வாகமும் தற்பொழுது பருவ மழை பெய்து வரும் நிலையில் சாலையில் மிகப்பெரிய குண்டும் குழியுமாக காணப்பட்டு ஆங்காங்கே தண்ணீர் தேங்கி சுமார் அரை அடி முதல் 1 அடி வரை சாலையில் பள்ளங்கள் விழுந்துள்ளன.

ஒரு சில இடங்களில் பாதாள சாக்கடை மூடியே நடு சாலையில் உடைந்துள்ளது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் பாதாளச் சாக்கடையில் விழும் அவலம் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில், பள்ளிக்கூடங்கள் அதிகமுள்ள பகுதியில் மேலும், இப்பகுதியை கடந்து தான் பெரியார் பேருந்து நிலையம் செல்ல வேண்டும் பள்ளிக் குழந்தைகள் பகுதியில் இரு சக்கர வாகனங்களில் செல்லும் போது கீழே விழுந்து காயங்கள் ஏற்படுகிறது.

இருசக்கர வாகனங்கள் கனரக வாகனங்கள் வரை பழுது ஏற்பட்டு சாலையில் நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. தற்காலிகமாக சாலையை சீர்செய்த பொதுமக்கள் உயிர் காக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும். அமைச்சரும் இத்தொகுதி எம்எல்ஏவாக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், உரிய நடவடிக்கைகள் எடுக்க மாநகராட்சிக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் உத்தரவிடுவார் என இப் பகுதி மக்களின் எதிர்பார்ப்பு ஆகும்.
செய்தி : Ravi Chandran

														
														
														
Leave your comments here...