எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பு நீட்டிப்பிற்கு எதிர்ப்பு : மேற்குவங்காள சட்டசபையில் தீர்மானம்

Scroll Down To Discover
Spread the love

மேற்கு வங்க மாநிலத்தின் சர்வதேச எல்லையில் இருந்து 50 கிமீ வரை எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பை நீட்டிக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக மேற்கு வங்க சட்டமன்றத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தியா-பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் – இந்தியாவை ஒட்டிய சர்வதேச எல்லையில் (IB) இருந்து இந்திய எல்லைக்குள் 50 கிலோமீட்டர் வரை சோதனை நடத்தவும், சந்தேக நபர்களைக் கைது செய்யவும், பறிமுதல் செய்யவும் எல்லைப் பாதுகாப்புப் படைக்கு (BSF) மத்திய அரசு அக்டோபர் மாத தொடக்கத்தில் அதிகாரம் அளித்தது.

பாஜக சட்டமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்புக்கு மத்தியில், எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பை நீட்டிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக மேற்கு வங்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. பஞ்சாபிற்கு அடுத்தபடியாக, இத்தகைய தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட இரண்டாவது மாநிலமாக மேற்கு வங்கம் உள்ளது.