திருப்பதி ஏழுமலையான் கோவில் : இங்கிலாந்தில் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது..!

Scroll Down To Discover
Spread the love

திருப்பதி ஏழுமலையான் கோவில், இங்கிலாந்தில் உள்ள உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. அந்த நிறுவனம் சார்பாக ஏழுமலையான் கோவிலுக்கு சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.

அந்தச் சான்றிதழை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி இந்திய பிரநிதிகள் மூலமாக பெற்றுக் கொண்டார்.

அப்போது தேவஸ்தான அறங்காவலர் தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி கூறியதாவது:- திருமலை-திருப்பதி தேவஸ்தானம் உலகில் எங்கும் இல்லாத வகையில் பக்தர்களுக்கு பல்ேவறு சேவைகளையும், வசதிகளையும் செய்து வருகிறது. சாதாரண நாளில் திருமலையில் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பக்தர்கள் சிறிய சிரமம் கூட இல்லாமல் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தரிசன வரிசை மேலாண்மை கூட நன்றாக நடக்கிறது.

அன்னதானத்திட்ட சமையல் கூட மேலாண்மை நன்றாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு மூன்றரை லட்சத்துக்கும் அதிகமான லட்டு பிரசாதங்கள் ஆரோக்கியமாக தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு சுமார் 35 ஆயிரம் முதல் 45 ஆயிரம் பக்தர்கள் வரை கல்யாண கட்டாவில் சிறிது கூட சிரமம் இல்லாமல் தலைமுடி காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.

தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை வீரர்கள் பக்தர்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் சேவை செய்து வருகின்றனர். தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் திருமலை தூய்மையாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.