தருமபுரி அருகே தடம் புரண்ட பயணிகள் ரயில் – உயிர் தப்பிய பயணிகள்..!

Scroll Down To Discover
Spread the love

தருமபுரி அருகே பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

தமிழகத்தில் தருமபுரி மாவட்டத்தில் அமைந்துள்ளது முத்தம்பட்டி மலைப்பாதை. இன்று அதிகாலை கேரளாவிலிருந்து பெங்களூரு பயணிகள் விரைவு ரயில் வந்து கொண்டிருந்தது.

இன்று அதிகாலை சேலம் ரயில் நிலையத்தை கடந்த இந்த ரயில் 3.50 மணியளவில் தருமபுரி மாவட்டம் வே.முத்தம்பட்டி மலைப்பாதை அருகே வந்த போது ரயில் பாதையை ஒட்டிய மலைப்பகுதியில் இருந்து மண் சரிவு ஏற்பட்டது.

திடீரென தடதடவென பாறைகளும் பெயர்ந்து ரயில் என்ஜினில் சிக்கி கொண்டது. என்ஜினை ஒட்டியுள்ள 5 பெட்டிகளும் தடம் புரண்டன . அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. சம்பவ இடத்துக்கு விரைந்த ரயில்வே பணியாளர்கள் தொடர் மழையிலும் ரயில் மீட்பு மற்றும் பாதை சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒற்றை வழித்தட ரயில்பாதையாக இந்த வழித்தடம் அமைந்துள்ளதால் இவ்வழியே செல்லும் அனைத்து ரயில்களின் இயக்கமும் இதனால் தாமதமாகியுள்ளன. விபத்து நடந்த இடம் வனப்பகுதியின் நடுவே உள்ளதால் ரயிலில் உள்ள பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்