பாஸ்டேக்கில் கட்ட போக்குவரத்துக்கழக கணக்கில் பணம் இல்லை : 5 மணி நேரமாக காத்திருந்த அரசு விரைவு பேருந்துகள் – பயணிகள் அவதி ..!

Scroll Down To Discover
Spread the love

சென்னையிலிருந்து கோவில்பட்டி நெல்லை கன்னியாகுமரி நாகர்கோவில் மார்த்தாண்டம் செல்லக்கூடிய அரசு பேருந்து கோவில்பட்டி அருகேயுள்ள கயத்தாறில் உள்ள சுங்கசாவடியில் பணம் கட்டுவதற்கு போக்குவரத்துக்கழக கணக்கில் பணம் இல்லாத காரணத்தால் பாஸ்டாக் மூலமாக பணம் செலுத்த போதிய வசதி இல்லாத காரணத்தால் அந்த பேருந்து இன்று ஐந்து மணி நேரம் காலதாமதமாகிய நிலையில் பயணிகளை மாற்று வசதி செய்து அனுப்பிய நிலையில் நடத்துனர் காலதாமதமாக பணம் செலுத்தி பேருந்தை சுங்கசாவடியை கடந்து சென்றது. நடத்துனர் முன்கூட்டியே அப்பணத்தை சுங்கசாவடியில் செலுத்தியிருந்தால் பேருந்தை 5 மணிநேர காலதாமதத்தை தடுத்து பயணிகள் நிம்மதியாகவும் போக்குவரத்துக் கழகத்திற்கு வருவாய் இழப்பும் ஏற்பட்டு இருக்காது.

தூத்துக்குடி : ப. பரமசிவம்