போலி பேஸ்புக் ஐடி மூலம் பெண்களை Tag செய்து ஆபாச பதிவிட்டவர் கைது : குமரி சைபர் கிரைம் போலீசார் அதிரடி

Scroll Down To Discover
Spread the love

முகநூலில் போலி பேஸ்புக் ஐடி மூலம் பெண்களை Tag செய்து ஆபாச பதிவுகள் பதிவிட்டவர் குமரி சைபர் கிரைம் போலீசாரால் அதிரடி கைது செய்யப்பட்டுள்ளார்

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை காஞ்சாம்புறம் பகுதியை சேர்ந்த இரண்டு இளம்பெண்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர்.

அதில் அவர்களது முகநூலில் ஒரு போலி பேஸ்புக் ஐடி-லிருந்து அவர்களை Tag செய்து ஆபாச பதிவுகள் மற்றும் இன்பாக்சில் ஆபாச குறுந்செய்தி வருவதாக அந்த புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து விசாரிக்க மாவட்ட சைபர் கிரைம் போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவிட்டார்.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் மாவட்ட சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் அஜ்மல் ஜெனிப் அவர்கள் வழக்குபதிவு செய்தார். மேலும் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு ஆய்வாளர் வசந்தி அவர்களின் விசாரணையில் போலி பேஸ்புக் ஐடி மூலம் ஆபாச பதிவுகள் அனுப்பி வந்தது காஞ்சாம்புறம் பகுதியை சேர்ந்த சுரேஷ் (26) என்பது தெரியவந்தது.

உடனே அவரை கைது செய்து சிறையில் அடைத்தார் .மேலும் அவர் இந்த செயலுக்கு பயன்படுத்திய மொபைல்போன் மற்றும் சிம் கார்டுகளை பறிமுதல் செய்தார்.

TharNash