நாகர்கோவிலில் பழுதான சாலைகளை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை ஆணையரிடம் விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தல்
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி எம்.பி. விஜய் வசந்த் நேற்று(10-11-2021) மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித்தை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் நாகர்கோவில் நகரில் பழுதான சாலைகளை போர்கால அடிப்படையில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் உள்ள சாலைகள் மிகவும் மோசமாக உள்ளதால் பெரும் விபத்துகள் ஏற்பட்டு பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
மேலும் பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுகொண்டார். அவருடன் காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரத்னகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
செய்தி : TharNash

														
														
														
Leave your comments here...