பயிர் காப்பீடு இழப்பீடு : நவம்பர் 15ம் தேதி கடைசி தேதி!

Scroll Down To Discover
Spread the love

தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மேலும் மழை தீவிரமடையலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் தங்கள் பயிர்களை காப்பீடு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், மதுரை, புதுக்கோட்டை, கரூர், சேலம், திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, ராமநாதபுரம், திருச்சி , வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சிவகங்கை, கடலூர், திருவள்ளூர், ஈரோடு மாவட்டங்களில் நவம்பர் 15ம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டும். கன்னியாகுமரி, அரியலூர், திண்டுக்கல், விருதுநகர், நாமக்கல், நெல்லை, தென்காசி மாவட்டங்களில் டிசம்பர் 15ம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ளலாம் என தகவல் வெளியாகியுள்ளது.