முல்லை பெரியாறு அணை விவகாரம் : காமெடி நடிகரைப்போல கேரள முதல்வருக்கு நன்றி கூறியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின் – பாஜக தலைவர் அண்ணாமலை

Scroll Down To Discover
Spread the love

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த பாஜகவினர் பங்கேற்றனர். 142 அடி வரை தண்ணீர் தேக்கலாம் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவு இருந்தும் அணையின் நீர்மட்டம் உயர்த்தப்படாமல் இருப்பதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை:- 5 மாநில மக்களிடம் திமுக அரசு மன்னிப்புக் கேட்க வேண்டும் என வலியுறுத்தினார். ‘கேரள அரசிடம் மண்டியிட்டு ஸ்டாலின் சரணடைந்துவிட்டார். முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் ஸ்டாலின் மாநிலத்தின் உரிமையை விட்டுகொடுத்துவிட்டார். திமுக அரசு உடனடியாக தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
https://youtu.be/-QsuhDW-WHc
ஸ்டாலின் சினிமாவில் வரும் காமெடி நடிகரைப்போல கேரள முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார். கேரள முதல்வர் நாங்கள் மரத்தை வெட்ட அனுமதி கொடுக்கவில்லை என்று கூறியிருக்கிறார். ஆக முதலமைச்சர் ஸ்டாலின் காமெடி செய்கிறார். மக்கள் அவர் மீது கோவத்தில் உள்ளனர்” என்றார்.