பைசாபாத் ரயில் நிலையத்துக்கு , ‘அயோத்தி கன்டோன்மெண்ட்’ பெயர் மாற்றம் அமல்.!

Scroll Down To Discover
Spread the love

உத்தரபிரதேசத்தில் அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் மாவட்டம், அயோத்தி மாவட்டம் என்று கடந்த 2018-ம் ஆண்டு பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இந்தநிலையில், 19-ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட பைசாபாத் ரெயில் நிலையத்தின் பெயர், ‘அயோத்தி கன்டோன்மெண்ட்’ என்று மாற்றப்படுவதாக வடக்கு ரெயில்வே சமீபத்தில் அறிவித்தது.

இதையடுத்து, ரெயில் நிலையத்தின் பெயர் பலகைகள் மாற்றப்பட்டுள்ளன. நடைமேடைகளில் உள்ள பழைய பெயர் பலகைகள் அகற்றப்பட்டுள்ளன. அயோத்தி கன்டோன்மெண்ட்’ என்று எழுதப்பட்ட புதிய பெயர் பலகைகள் நிறுவப்பட்டு வருகின்றன. கட்டிடத்தின் முகப்பில், புதிய பெயருடன் பேனர் வைக்கப்பட்டுள்ளது. ராமர் நகர் என்பதால் அயோத்தி என்று பெயர் சூட்டியது பொருத்தமானது என்று உள்ளூர் மக்களில் சிலர் வரவேற்கின்றனர்.

ஆனால், அயோத்தி ரெயில் நிலையம் என்று தனியாக இருக்கும்போது, அயோத்தி கன்டோன்மெண்ட் என்று பெயர் சூட்டுவது குழப்பத்தை உருவாக்கும் என்று வேறு சிலரும், வரலாற்று அறிஞர்களும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.