சாத் பூஜை- யமுனை நதியில் பொங்கி வழியும் ரசாயன நுரையில் நீராடிய மக்கள்..!

Scroll Down To Discover
Spread the love

வட மாநிலங்களில் பெரிய அளவில் கொண்டாடப்படும் விழாவில் சாத் பூஜையும் ஒன்றாகும். சூரிய பகவானுக்கு நன்றி சொல்வதற்காக நடத்தப்படும் இந்த விழா 4 நாட்கள் தொடர்ந்து நடைபெறும். நான்காவது நாளில் நீர் நிலைகளில் கூடி மக்கள் பூஜை செய்து சூரிய பகவானை வழிபடுவது வழக்கம்.

இந்த ஆண்டின் சாத் பூஜை இன்று (நவ.,8ம் தேதி) துவங்கியது. இதையொட்டி நீர்நிலைகளில் மக்கள் புனித நீராடுகின்றனர். சாத் பூஜையையொட்டி டில்லியில் 10ம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டில்லி கலிந்தி கஞ்ச் அருகே யமுனை நதியில் பொதுமக்கள் நீராடி மகிழ்ந்தனர். யமுனையில் ரசாயனம் கலந்த நீர் நுரை பொங்கி வருவதையும் பொருட்படுத்தாமல் மக்கள் குளித்து மகிழ்கின்றனர்.


சாத் பூஜையை பீஹார், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த மக்களே பெரும்பாலும் கொண்டாடுகின்றனர். தற்போது நாட்டின் பிற மாநிலங்களிலும் அந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் குடியேறியிருப்பதால் அந்தந்த மாநிலங்களில் உள்ள நீர் நிலைகளில் சாத் பூஜையை கொண்டாடி வருகின்றனர்.