சமையல் எண்ணெய் இறக்குமதிக்கு விதிக்கப்படும் 2.5% சுங்கவரி முற்றிலும் நீக்கம் – மத்திய அரசு அதிரடி

Scroll Down To Discover
Spread the love

சமையல் எண்ணெய்கள் இறக்குமதிக்கு விதிக்கப்படும் 2.5% சுங்கவரி முற்றிலும் நீக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

பெட்ரோல், டீசலை விலை உயர்வை போன்றே இந்தியாவில் சமையல் எண்ணெய்களின் விலையும் உச்சத்தை தொட்டுவருகிறது. கடந்த 2020ஆம் ஆண்டு ஆரம்பத்தில் 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட சமையல் எண்ணெய், இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ரூ.180ஐத் தொட்டது.

இந்நிலையில் அத்தியாவசிய தேவையான பாமாயில், சூரியகாந்தி எண்ணெய், சோயாபீன் எண்ணெய் இறக்குமதி மீதான 2.5% சுங்கவரி நீக்கப்பட்டுள்ளது. சமையல் எண்ணெய்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.