பள்ளி பாடத்திட்டங்களில் பருவநிலை மாற்றம் : கிளாஸ்கோ மாநாட்டில் பிரதமர் வலியுறுத்தல்

Scroll Down To Discover
Spread the love

பிரிட்டனில் உள்ள கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாட்டில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்த பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரதமர் மோடி உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி:- பருவநிலை மாற்றத்தால், இந்தியா போன்ற வளரும் நாடுகள் வேளாண் துறை மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டுள்ளது. திடீரென பெய்யும் மழை, வெள்ளம் காரணமாக பயிர்கள் சேதமடைகின்றன. பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கு கிடைக்கும் முக்கியத்துவம் அதை மேம்படுத்துவதற்கு செய்ய வேண்டிய மாற்றங்களுக்கு கிடைப்பதில்லை.

அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்வதற்காக பள்ளி பாடத்திட்டங்களில் பருவநிலை மாற்றம் குறித்த பாடங்களை இணைக்க வேண்டிய அவசியம் இப்போது எழுந்துள்ளது. 2070ஆம் ஆண்டில் இந்தியாவில் கார்பன் உமிழ்வு பூஜ்ஜியமாக இருக்கும்.

உலக மக்கள் தொகையில் 17 % பேர் இந்தியாவில் இருந்தாலும் உலக அளவில் வெளியேற்றப்படும் மொத்த கார்பன் உமிழ்வு 5 %மட்டும்தான். பருவநிலை மாற்றத்துக்கான அனைத்து சாத்தியங்களையும் இந்தியா மேற்கொண்டு வருகிறது. சுற்றுச்சூழலுக்கு ஏற்ப வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்வது உலகளாவிய இயக்கமாக மாற வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.