கிணற்றில் தவறி விழுந்த பசு : மீட்ட தீயணைப்பு துறையினர்..!

Scroll Down To Discover
Spread the love

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சோழசேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார் இவர் சொந்தமாக பசுமாடு வளர்த்து வருகிறார் வழக்கம்போல் மேய்ச்சலுக்கு சென்ற பசு மாடு அருகே இருந்த வயக்காட்டில் உள்ள கிணற்றில் தவறி விழுந்துள்ளது.

இதையடுத்து சிவகுமார் இராஜபாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார் தகவலின்பேரில் நிலைய போக்குவரத்து அதிகாரி நாகராஜ் மற்றும் மகேஸ்வரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கிணற்றில் இருந்த பசுமாட்டை உயிருடன் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.