தளபதியின் அடுத்த அப்டேட் : விஜய்யுடன் விரைவில் கைகோர்க்கும் வெற்றிமாறன்.!

Scroll Down To Discover
Spread the love

மாஸ்டர்’ வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஜய் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில்‘விஜய் 66’ படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தின், அறிவிப்பு சமீபத்தில் அதிகாரபூர்வமாக வெளியானது.

அடுத்ததாக மீண்டும் ‘விஜய் 67’ படத்திற்காக விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இணைகிறார் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், விஜய் விரைவில் இயக்குநர் வெற்றிமாறனுடன் புதிய படத்தில் இணைகிறார்.

விகடன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் வெற்றிமாறன், “ என் பக்கம்தான் தாமதம் ஆகிறது. விஜய் தரப்புல நீங்க முடிச்சிட்டு வாங்கன்னு சொல்லிருக்காங்க. இன்னைக்கு இருக்கிற சூப்பர் ஸ்டார்ல விஜய் சாரோட படம் பண்றதுக்கான வாய்ப்பிருக்கிறது ரொம்ப சந்தோஷம். அதனால், இப்போ இருக்கிற படங்களை முடிச்சிட்டு விஜய் சார்கூட படம் பண்றதுல ரொம்ப ஆர்வமா இருக்கேன்” என்று உற்சாகமுடன் தெரிவித்திருக்கிறார்.