நடிகை ஷெர்லின் சோப்ரா மீது ராஜ் குந்த்ரா- ஷில்பா ஷெட்டி ரூ.50 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு.!

Scroll Down To Discover
Spread the love

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா. தொழிலதிபரான இவர் பெண்களை ஆபாச ‘வீடியோ’ எடுத்து தனி இணையதளம் துவக்கி பதிவிட்டதாக புகார் எழுந்தது. போலீசாரால் கைது செய்யப்பட்ட அவர் சமீபத்தில் ‘ஜாமின்’ பெற்றார்.

இதற்கிடையே மும்பையில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் மீது, மற்றொரு நடிகையான ஷெர்லின் சோப்ரா ஒரு புகார் அளித்தார்.

அதில் தம்பதியினர் மீது மோசடி, மிரட்டல், துன்புறுத்தல் உள்ளிட்ட பல்வேறு புகார்களை கூறி இருந்தார். இதுதொடர்பாக ஷெர்லின் சோப்ராவுக்கு ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் தரப்பில் வக்கீல் ‘நோட்டீஸ்’ அனுப்பப்பட்டு உள்ளது.

அதில் கூறப்பட்டு உள்ளதாவது: விளம்பரம் தேடும் நோக்கில் ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு உள்ளது. அவதுாறு ஏற்படுத்துதல் மற்றும் பணம் பறித்தல் இதன் நோக்கமாக உள்ளது. வழக்கில் எந்த தொடர்பும் இல்லாத ஷில்பா ஷெட்டி மீது பொய்யான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு உள்ளன. எனவே பத்திரிகைகள் மற்றும் ‘டிஜிட்டல் மீடியா’ வாயிலாக ஏழு நாட்களுக்குள் பொது மன்னிப்பு கோருவதுடன், 50 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது