சென்னை விமான நிலையத்தில் 1 கிலோ தங்கக் கட்டி பறிமுதல்.!

Scroll Down To Discover
Spread the love

துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் 12.10 2021 அன்று சென்னை வந்த ஒரு ஆண் பயணி, தங்கம் கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், விமான நிலைய சுங்கத் துறை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், அவரை வழிமறித்து சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையின் போது அந்த நபர், மொத்தம் 1170 கிராம் தங்கம் கடத்தி வந்திருப்பது கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. இதில் ஒரு தங்கக்கட்டி மட்டும் சுமார் 1 கிலோ எடை கொண்டதாகவும், ரூ.51.36 லட்சம் மதிப்புடையது என்றும் சுங்கத்துறையினர் தெரிவித்துள்ளனர்.