இந்திய விண்வெளி சங்கம் : அக்டோபர் 11ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

Scroll Down To Discover
Spread the love

இந்திய விண்வெளி சங்கத்தை (ஐஎஸ்பிஏ) 2021 அக்டோபர் 11 அன்று காலை 11 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார். இந்த முக்கிய நிகழ்வில் விண்வெளி துறையின் பிரதிநிதிகளுடன் அவர் உரையாடுவார்.

இந்திய விண்வெளி சங்கம் பற்றி: ஐஎஸ்பிஏ என்பது விண்வெளி மற்றும் செயற்கைக்கோள் நிறுவனங்களின் முதன்மையான தொழில்துறை சங்கம் ஆகும். இந்திய விண்வெளித் துறையின் கூட்டு குரலாக இருக்க இது விரும்புகிறது.

கொள்கை வாதத்தை மேற்கொள்வதோடு, அரசு மற்றும் அதன் நிறுவனங்கள் உட்பட இந்திய விண்வெளி களத்தில் உள்ள அனைத்து பங்குதாரர்களுடனும் இச்சங்கம் இணைந்து செயல்படும். தற்சார்பு இந்தியா பற்றிய பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை எதிரொலிக்கும் வகையில், இந்தியாவை தற்சார்பு மிக்க, தொழில்நுட்ப ரீதியாக முன்னேற்றம் அடைந்த மற்றும் விண்வெளி அரங்கில் முன்னணி வீரராக ஆக்க இந்த அமைப்பு உதவும்.

விண்வெளி மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்பங்களில் மேம்பட்ட திறன்களைக் கொண்ட முன்னணி உள்நாட்டு மற்றும் உலகளாவிய நிறுவனங்களை ஐஎஸ்பிஏ பிரதிநிதித்துவப் படுத்துகிறது. லார்சன் அண்ட் டூப்ரோ, நெல்கோ (டாடா குழுமம்), ஒன்வெப், பார்தி ஏர்டெல், மேப் மை இந்தியா, வால்சந்த்நகர் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் அனந்த் டெக்னாலஜி லிமிடெட் உள்ளிட்டோர் இதன் நிறுவன உறுப்பினர்கள் ஆவர்.

கோட்ரெஜ், ஹியூஸ் இந்தியா, அஜிஸ்டா-பிஎஸ்டி ஏரோஸ்பேஸ் பிரைவேட் லிமிடெட், பிஇஎல், சென்டம் எலக்ட்ரானிக்ஸ், மேக்சார் இந்தியா ஆகி நிறுவனங்கள் இதர முக்கிய உறுப்பினர்கள் ஆவர்.