பெண் காவலர் ஆய்வாளர் சஸ்பெண்ட் ..! குற்றவாளிக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி டிஐஜி அதிரடி உத்தரவு ..!

Scroll Down To Discover
Spread the love

கோவையில் குற்றவாளிக்கு ஆதரவாக செயல்பட்ட பெண் காவலர் ஆய்வாளர் கலையரசி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.. இதற்கான உத்தரவை கோவை சரக டிஜஜி. முத்துசாமி உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாவட்டத்தில் தீவிர குற்றப்பிரிவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் கலையரசி. இவர், கோவைபொருளாதார குற்றப்பிரிவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியபோது மோசடி நிதி நிறுவனங்களின் மீது பாதிக்கப்பட்டமக்கள் அளித்த புகாரின்பேரில் உடனடியாக வழக்குப்பதிவு செய்யாமல் கால தாமதமாக வழக்குப்பதிவு செய்து குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக நடந்து கொண்டதாக தெரிகிறது.

சில வழக்குகளில் குற்றவாளிகள் எளிதில் தப்பும் வகையில் இன்ஸ்பெக்டர் கலையரசி சாதகமாக நடந்து கொண்டதாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக உயரதிகாரிகள் விசாரணை அடிப்படையில் கோவை சரக டிஐஜி முத்துச்சாமி, கலையரசியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.