விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவினால் ரூ.5,000 பரிசு : மத்திய அரசு அறிவிப்பு..!

Scroll Down To Discover
Spread the love

நாட்டில் சாலை விபத்தால் ஏற்படும் மரணங்கள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. விபத்தில் சிக்குவோரை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் அவர்களின் உயிரை காப்பாற்ற முடியும்.

ஆனால், பெரும்பாலான விபத்துகளில் காயமடைந்தவர் தாமதமாக மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுவதால் அவரின் உயிரை டாக்டர்களால் காப்பாற்ற முடிவதில்லை.

எனவே, சாலை விபத்துக்களை குறைக்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வரும் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவும் நல் உள்ளம் படைத்தவர்களுக்கு பரிசுத் தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது.

அதாவது, விபத்தில் காயமடைந்து உயிருக்கு போராடுபவர்களை, ‘கோல்டன் ஹவர்’ எனப்படும் விபத்து நடந்த ஒரு மணி நேரத்திற்குள் மருத்துவமனையில் சேர்த்து, அவர்களின் உயிரை காப்பாற்றுவோருக்கு ₹5000 பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் வரும் 15ம் தேதி அமலாகி வரும் 2026ம் ஆண்டு மார்ச் மாதம் வரை அமலில் இருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.