ஈஷாவில் நவராத்திரி விழா அக்.7-ம் தேதி தொடக்கம்..!

Scroll Down To Discover
Spread the love

ஈஷாவில் உள்ள லிங்க பைரவியில் நவராத்திரி திருவிழா அக்.7-ம் தேதி முதல் அக்.15-ம் தேதி வரை கோலாகலமாக நடைபெற உள்ளது.

இதையொட்டி, அக். 8, 9, 10, 12, 15 ஆகிய தினங்களில் சம்ஸ்கிரிதி மாணவர்களின் சிறப்பு கலை நிகழ்ச்சிகள் லிங்க பைரவி யூ- டியூப் சேனலில் மாலை 6.45 மணிக்கு நேரலை ஒளிப்பரப்பு செய்யப்படும் (https://www.youtube.com/c/LingaBhairavi) . இதில் கர்நாடக சங்கீதம், பரத நாட்டியம், வயலின் இசை போன்ற நிகழ்ச்சிகள் நடக்கும்.

இதுதவிர, அக்.9, 10, 15 ஆகிய தேதிகளில் மாலை 5.30 மணிக்கு நடக்கும் சிறப்பு அபிஷேக நிகழ்ச்சியை பார்வையிட https://isha.sadhguru.org/in/en/events/annual-events/navratri என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்வது அவசியம்.

கொரோனா தொற்று சூழலை முன்னிட்டு அரசு விதித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் படி, திங்கள் முதல் வியாழன் வரை காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை மட்டுமே ஈஷாவிற்கு பக்தர்கள் நேரில் வருகை தர முடியும். வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தேதிகளில் ஈஷாவிற்கு வர அனுமதி இல்லை.