சீரடி சாய்பாபா கோவிலில் ஒரு நாளைக்கு 15 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி – கோவில் நிர்வாகம்

Scroll Down To Discover
Spread the love

மகாராஷ்டிரா மாநிலம் சீரடியில் அமைந்துள்ள சாய்பாபா கோவில் அக்டோபர் 7-ம் தேதி முதல் திறக்கப்பட்டு தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 15 ஆயிரம் பக்தர்கள் வரை மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக சில கட்டுப்பாடுகளுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பின்பற்றப்படும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும். பக்தர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். கர்ப்பிணி பெண்கள், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.