இந்தியா வாகனங்களின் ஹாரன்களில் இனி இசைக் கருவிகளின் இசை மட்டுமே ஒலிக்கவேண்டும் – விரைவில் புதிய சட்டம்

Scroll Down To Discover
Spread the love

இந்தியாவில் வாகனங்களின் ஹாரன்களில் இந்திய இசைக் கருவிகளின் இசை மட்டுமே ஒலிக்கவேண்டும் என கட்டுப்பாடு விதிக்கும் புதிய சட்டம் வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் நகரத்தில் நட்ந்த விழா ஒன்றில் கலந்து கொண்டு மத்திய போக்குவரத்துதுறை அமைச்சர் நிதின் கட்காரி பேசும் போது கூறியதாவது:- ஆம்புலன்ஸ், போலீஸ் வாகனங்களில் ஒலிக்கும் சைரன்களின் சத்தம் மிகவும் எரிச்சலூட்டுகிறது. குறிப்பாக அமைச்சர்களின் வாகனங்கள் சாலைகளில் கடக்கும் போது ஒலியின் அளவை அதிகபட்சத்தில் வைத்துவிடுகின்றனர். இதுபோன்ற சத்தங்கள் காதுகளுக்கு தீங்கு விளைவிக்கும்.

அதனால், ஆம்புலன்ஸ், போலீஸ் வாகனங்களில் ஒலிக்கும் சைரன்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு காதுக்கு இனிமையான ஒலியை பொருத்த முடிவு செய்துள்ளேன்.

இந்தியாவில் ஹாரன்களில் இந்திய இசைக் கருவிகளின் இசை மட்டுமே ஒலிக்கவேண்டும் என கட்டுப்பாடு விதிக்கும் வகையில் ஒரு புதிய சட்டம் இயற்றப்படும் என கூறினார்.