தீபாவளி பண்டிகை : அரசு விரைவு பஸ்களில் இன்று முதல் முன்பதிவு துவக்கம்..!

Scroll Down To Discover
Spread the love

தீபாவளி, பொங்கல் பண்டிகைக்கு, சொந்த ஊருக்கு செல்வோருக்காக, அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

இந்த ஆண்டில் தீபாவளி பண்டிகை, நாடு முழுதும் நவம்பர், 4ம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. வெள்ளியன்று, ஒரு நாள் கூடுதலாக விடுப்பு எடுத்தால், நான்கு நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும்.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி, சென்னையில் இருந்து வெளியூர் மற்றும் சொந்த ஊருக்கு செல்வோர், தங்கள் பயணத்திற்கு அரசு பஸ்களில் முன்பதிவு செய்வர். அரசு விரைவு போக்குவரத்து கழகங்களில், ஒரு மாதத்திற்கு முன், முன்பதிவு செய்யலாம்.

அதன்படி, நவம்பர் 3ல் பயணிப்பதற்கான முன்பதிவு, அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களுக்கு இன்று துவங்குகிறது.அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், நாகர்கோவில், திருநெல்வேலி, துாத்துக்குடி உட்பட பல்வேறு நகரங்களுக்கு சொகுசு பஸ்களும், படுக்கை வசதி உடைய பஸ்களும், குளிர்சாதன பஸ்களும் இயக்கப்படுகின்றன.