மணிப்பூரில் கட்டுக்கட்டாக பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்..!

Scroll Down To Discover
Spread the love

மணிப்பூர் தலைநகர் இம்பாலில் ஒரு வீட்டில் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் அங்கு சென்ற போலீசார், Keirao Wangkham பகுதியில் இருந்த வீட்டில் இருந்து சுமார் 12 கோடி ரூபாய் மதிப்பிலான பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பல முக்கிய பிரமுகர்களிடம் இருந்து பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை பெற்று, அதனை மாற்றிக் கொடுக்கும் பணியினை இருவரும் செய்து வந்தது தெரியவந்தது.

இப்பணம் கள்ளக்கடத்தல், போதைப் பொருட்கள் கடத்தல் உள்ளிட்டவைக்கு பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.