அன்னியச் செலாவணி மோசடி : இந்தியாவில் இயங்கும் சீன நாட்டின் நிதி நிறுவனத்தின் 131 கோடி ரூபாய் முடக்கம் : அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை

Scroll Down To Discover
Spread the love

அன்னியச் செலாவணி மோசடி தொடர்பாக, இந்தியாவில் இயங்கும் சீன நாட்டின் வங்கி சாரா நிதி நிறுவனத்தின் 131 கோடி ரூபாயை, அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

கொரோனா காரணமாக கடந்த ஆண்டுபிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், வேலைவாய்ப்பை இழந்த ஏராளமானோர், உடனடியாக கடன் தரும் மொபைல் செயலிகள் வாயிலாக அதிக வட்டிக்கு கடன் பெற்றனர். கடன்தாரரின் சொந்த விபரங்களை பயன்படுத்தியும், பல வகையில் மிரட்டல் விடுத்தும் இந்த கடன் வசூலிக்கப்படுவதாக ஏராளமான புகார்கள் வந்தன.

இது குறித்த விசாரணையின் போது Cash bean என்ற அலைபேசி கடன் செயலியை நிர்வகிக்கும், B.C பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் அன்னியச் செலாவணி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதே குற்றச்சாட்டுகளுக்காக பி.சி.பைான்சியல் நிறுவனத்தின் ஆயிரத்து 89 கோடி ரூபாய் கடந்த ஆகஸ்டில் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.