இஸ்லாமிய பெண் வரைந்த கிருஷ்ணர் ஓவியம் – கோவிலில் வைத்து வழிபாடு…!

Scroll Down To Discover
Spread the love

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ஜாஸ்னா சலீம், 2 குழந்தைகளுக்கு தாயான இவர் ஓவியம் வரைவதில் வல்லவர். இவர் தன் வாழ்நாளில் பல ஓவியங்களை வரைந்துள்ளார்.

இவர் சிறு வயது முதலே ஓவியத்தில் அதிக நாட்டம் கொண்டவர். அவரை சிறுவயதில் அவரது பெற்றோர்கள் “கண்ணா” என்றே அழைத்துள்ளனர். இந்நிலையில் ஜாஸ்னா தனது சிறுவயதில் கிருஷ்ணரின் புகைப்படத்தை பார்த்தும் பிடித்து போய் அதை தான் வரைய வேண்டும் என்ற எண்ணம் எழுந்துள்ளது.

இந்நிலையில் அவர் பல கிருஷ்ணர் படங்களை வரைந்துள்ளார். இதுவரை 500க்கும் அதிகமான வித விதமான கிருஷ்ணர் படங்களை வரைந்திருந்தார்.

ஆனால் இவர் வரைந்த கிருஷ்ணர் படம் பத்தனம்திட்டா மாவட்டம் பந்தளம் பகுதியிலுள்ள கிருஷ்ணசுவாமி கோவில் நிர்வாகத்தினர் இவர் வரைந்து வைத்திருக்கும் கிருஷ்ணர் படத்தை வாங்கி கோயிலில் வைத்து வணங்க இவருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அதன்பேரில் தான் வரைந்த ஓவியத்தை எடுத்துக்கொண்டு கோயிலுக்கு சென்று கிருஷ்ணர் படத்தை காணிக்கையாக வழங்கியுள்ளார். தற்போது இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.