இந்திய எல்லைக்குள் மீண்டும் அத்துமீறி நுழைந்த சீன ராணுவம்..?

Scroll Down To Discover
Spread the love

இந்திய – சீன எல்லைப் பகுதியில் அமைந்துள்ள உத்தரகண்ட் மாநிலத்தின் பாராஹோட்டி என்ற பகுதிக்குள் கடந்த மாதம் அத்துமீறி நுழைந்த சீன ராணுவ வீரர்கள், அப்பகுதியில் மூன்று மணி நேரம் தங்கி இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இநம் நாட்டின் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பாராஹோட்டி என்ற இடத்திற்குள் கடந்த மாதம் 30ம் தேதி சீன ராணுவத்தினர் 100 குதிரைகளில் அத்துமீறி நுழைந்ததாக கூறப்படுகிறது. அங்கு மூன்று மணி நேரம் அவர்கள் தங்கி இருந்ததாகவும், அங்கிருந்த நடை பாலம் ஒன்றை அவர்கள் தகர்த்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து தகவல் அறிந்து ராணுவம் மற்றும் இந்தோ – திபெத் போலீஸ் படை விரைந்ததும், சீன வீரர்கள் அந்த இடத்தை விட்டு சென்றாக கூறப்படுகிறது.

ஆனால் அரசிடம் இதுபோன்ற தகவல் எதுவும் இல்லை’ என, உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்..