வள்ளுவன் இருந்தபோது இந்து மதம் இல்லை – திருமாவளவன் சர்ச்சை பேச்சு…!

Scroll Down To Discover
Spread the love

தஞ்சையில் திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்களை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் பங்கேற்று பேசினார்.

திருவள்ளுவரை எந்த சாயமும் பூசி முடக்கிவிட முடியாது என்று உரையை தொடங்கிய திருமாவளவன் ஒரு கட்டத்தில் திருவள்ளுவர் ஆண்டு அறிவியல் பூர்வமாக இல்லை என்றும் சிவனை, மஹா விஷ்ணுவை யார் பார்த்தது? ஆவர்களை போலத்தான் திருவள்ளுவரையும் யாரும் பார்த்தது இல்லை என்பதால் அவரும் கற்பனையே என்றார் வள்ளுவன் இருந்த போது இந்து மதம் இல்லை என்றும், சமணர்களும், பவுத்தர்களும், இஸ்லாமியர்கள் கூட திருவள்ளுவருக்கு உரிமை கோரலாம் என தெரிவித்த திருமாவளவன், வள்ளுவருக்கு குல்லா கூட வைக்கலாம் என்றும் பேசினார்.

திருவள்ளுவர் விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேடி, அதன்மூலம் தமிழகத்தில் காலூன்ற பா.ஜ.க. நினைக்கிறது. திருவள்ளுவரை இந்து சாமியாராக்க பா.ஜ.க. முயற்சிக்கிறது. பா.ஜ.க.வின் நினைப்பு ஒருபோதும் தமிழகத்தில் நிறைவேறாது. இது பெரியார் மண். வள்ளுவமும்-அம்பேத்கரின் கொள்கைகளும் வேறூன்றி கிடக்கும் மண் இவ்வாறு அவர் பேசினார்.