சென்னை விமான நிலையத்தில் ரூ. 27.8 லட்சம் தங்கம் பறிமுதல் – ஒருவர் கைது.!

Scroll Down To Discover
Spread the love

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ. 27.8 லட்சம் மதிப்பில் 583 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்

உளவுத் துறையினரிடம் இருந்து கிடைத்தத் தகவலின் அடிப்படையில் எமிரேட்ஸ் ஈகே-542 விமானத்தின் மூலம் துபாயில் இருந்து சென்னை வந்த 45 வயது ஆண் பயணி ஒருவரை சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

அவரை சோதனை செய்த போது, அவரது உடலில் தங்கப்பசை அடங்கிய 4 பொட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சுங்கச் சட்டம் 1962-இன் கீழ் ரூ. 27.8 லட்சம் மதிப்பில் 583 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதோடு, அந்தப் பயணியும் கைது செய்யப்பட்டார்.