ராணுவம் சார்பில் எல்லையில் சாலை அமைக்கும் பணிகள்; முதல்முறையாக பெண் பொறியாளர் நியமனம்

Scroll Down To Discover
Spread the love

எல்லைப் பகுதிகளில் சாலைகள் அமைக்கும் பணிகளுக்காக, ‘BRO’ எனப்படும் எல்லை சாலை அமைக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கும் பெண்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில், இதில் தலைமை பொறுப்புக்கு முதல்முறையாக பெண் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:எல்லை சாலை அமைக்கும் நிறுவனங்களில் பல ஆண்டுகளாக பெண் அதிகாரிகள் பணி நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். இதில் தலைமை பணிக்கு பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டது இல்லை.

உத்தரகண்ட் மாநிலம் சமோலியின் பிபல்கோட்டி என்ற இடத்தில், 75வது சாலை அமைக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் பணிகளை தலைமை ஏற்று நடத்தும் ‘கமாண்டிங்’ அதிகாரியாக மேஜர் அயினா என்ற பெண் அதிகாரி முதல்முறையாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

ராணுவ சாலை அமைக்கும் பணியில் தலைமை பொறுப்பில் நியமிக்கப்படும் முதல் பெண் பொறியாளர் என்ற பெருமையை இவர் பெறுகிறார். இவருக்கு கீழ், மூன்று பெண் அதிகாரிகள் பணியாற்ற உள்ளனர்.இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது