பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு..!!

Scroll Down To Discover
Spread the love

பான் எண்ணை (நிரந்தர கணக்கு எண்) ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கு வரும் 30-ம் தேதி கடைசி நாள் என்று வருமான வரித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்கிடையே, கொரோனா காரணமாக பல்வேறு தரப்பட்டவர்களும் கடுமையான சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில், அவர்கள் விடுத்த கோரிக்கைகளின் அடிப்படையில் பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான கால அவகாசம் அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரையிலும் மேலும் நீட்டிக்கப்பட்டு உள்ளது. மேற்கண்ட தகவல் மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் செய்தித் தொடர்பாளர் சுரபி அலுவாலியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.