11 மாநிலங்களின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.2,427 கோடி மானியம் : தமிழகத்துக்கு ரூ.267.90 கோடி

Scroll Down To Discover
Spread the love

11 மாநிலங்களின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத்துறை இன்று ரூ.2,427 கோடி வழங்கியது.

2021-22ம் ஆண்டுக்கான இணைப்பு மானியத்தின் முதல் தவணை தொகை வழங்கப்பட்டுள்ளது. கன்டோன்மென்ட் வாரியம் உட்பட மில்லியனுக்கு மேற்பட்டோர் அல்லாத (Non-Million Plus cities (NMPCs) நகரங்களுக்கு இந்த மானியம் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு திட்டங்களின் கீழ், சுகாதாரம் மற்றும் குடிநீர் வசதி போன்றவற்றுக்கு மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கீடு செய்யும் நிதியை விட கூடுதலாக நிதி கிடைப்பதை உறுதி செய்யவும், மக்களுக்கு தரமான சேவைகள் வழங்கவும் இந்த மானியம் வழங்கப்படுகிறது.

இந்த மானியத்தை, மத்திய அரசிடம் இருந்து பெற்ற தேதியிலிருந்து 10 நாட்களுக்குள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாநிலங்கள் வழங்க வேண்டும். 10 நாட்களுக்கு மேல் தாமதம் ஏற்பட்டால், மானியத்தை வட்டியுடன் சேர்த்து மாநில அரசு செலுத்த வேண்டும்.

தமிழகத்துக்கு ரூ.267.90 கோடி மானியத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. மற்ற மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட தொகை விபரங்கள் கீழ்கண்ட இணைப்பில் உள்ளது