துபாயில் இருந்து சென்னை வந்த பெண்ணிடம் 1.34 கிலோ தங்கம் பறிமுதல்..!

Scroll Down To Discover
Spread the love

துபாயில் இருந்து சென்னை வந்த பெண்ணிடம் ரூ.65 லட்சம் மதிப்புள்ள 1.34 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டார்.

கொச்சின் வருவாய் புலனாய்வு இயக்குனரகம் அளித்த உளவுத் தகவல் அடிப்படையில், துபாயில் இருந்து எமிரேட்ஸ விமானத்தில் இன்று அதிகாலை 2.20 மணியளவில், சென்னை வந்த 28 வயது பெண் பயணியிடம், சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அவர் இரண்டு பாக்கெட் மற்றும் இரண்டு பொட்டலங்களில் தங்கப் பசையை, உள்ளாடையிலும், மலக்குடலிலும் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, சுங்கச்சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றிலிருந்து 1.34 கிலோ சுத்த தங்கம் பிரித்தெடுக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.65 லட்சம். அந்தப் பெண் கைது செய்யப்பட்டார்.