உலகின் செல்வாக்கு மிகுந்த 100 பிரபலங்கள் பட்டியல் – இந்தியாவின் முக்கிய தலைவர் மோடி.!

Scroll Down To Discover
Spread the love

உலகில் செல்வாக்கு மிகுந்த 100 பிரபலங்கள் பட்டியலில் பிரதமர் மோடி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிப்பாளர் அதார் பூனவல்லா உள்ளிட்ட சில இந்தியர்கள் இடம் பிடித்துள்ளனர்.

2021ஆம் ஆண்டில் உலகின் செல்வாக்கு மிகுந்த 100 பிரபலங்கள் பட்டியலை அமெரிக்காவின் டைம் இதழ் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் நேரு, இந்திரா காந்திக்கு பிறகு உருவான மிகப்பெரிய அரசியல் சக்தி என மோடி குறித்து டைம் இதழின் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே நேரம் மோடி மீது கடும் விமர்சனங்களையும் இக்கட்டுரை முன்வைத்துள்ளது.சுதந்திர இந்தியாவில், நேரு, இந்திராவுக்கு பின், மாபெரும் செல்வாக்கு பெற்ற தலைவராக நரேந்திர மோடி உள்ளார். ஆணாதிக்க சமூகத்தில் தனது திறமையை நிரூபித்தவர் அச்சமில்லாத அரசியலின் முகம் என்றும் மம்தா பானர்ஜி குறித்து இக்கட்டுரை கருத்து கூறியுள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ், சீன அதிபர் ஷி ஜிங்பிங், முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உள்ளிட்டோரும் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். தலிபான் தலைவர் மவுல்வி அப்துல் கனி பராதரும் இதில் இடம் பெற்றுள்ளார்.