போலி பல் டாக்டர் மீது புகார்: காவல் ஆணையர் நடவடிக்கைக்கு கலெக்டர் பரிந்துரை.!

Scroll Down To Discover
Spread the love

போலி பல் டாக்டர் மீது நடவடிக்கை கோரி கொடுத்த புகாரில், மதுரை நகர காவல் துறை ஆணையர் நடவடிக்கைக்கு, மதுரை மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்துள்ளார்.

மதுரை கே.கே.நகர் கரும்பாலை மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் என்ற வெங்கடேசன். இவர், மாவட்ட ஆட்சியர் அனீஸ்சேகரிடம், புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் ,தான் பல் வலியால் அவதியுற்றதாகவும், அதற்கான சிகிச்சை பெற மேல மாசி வீதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றேன்.

அங்கிருந்த டாக்டரிடம், சிகிச்சை பெற்றும் குணமடையாமல், மீண்டும் மீண்டும் சென்றேன். அப்போது, அந்த டாக்டருடன் அவரது மகனும் இருந்தார். இருந்தபோது, தந்தைதான் சிகிச்சை அளித்து ஆபரேசன் செய்யவேண்டு
மென்று கூறி மருந்து மாத்திரைகளை எழுதிக்கொடுத்தார்.அவ்வாறு எழுதிக்கொடுத்த சீட்டில் மகனின் கையெழுத்தை தந்தை போட்டுக் கொடுத்தார்.

இதனால், அதிர்ச்சி அடைந்த நான் அவர்களிடம் கேட்டபோது, என்னை மிரட்டி அனுப்பினார்கள். அப்போது தான் தந்தை பல் மருத்துவம் படிக்காத போலியான மருத்துவர் என்பது, தெரியவந்தது. அவர் மகன் பெற்ற பட்டத்தை வைத்து சிகிச்சை அளிப்பதும் தெரிந்தது. எனவே, போலி மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெரிவித்திருந்தார்.இந்த மனுவை பெற்ற ,மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர், மதுரை நகர காவல் ஆணையருக்கு விசாரிக்க அனுப்பி வைத்தார்.

செய்தி : ரவிசந்திரன்