இந்த வாரத்தில் “கோவாக்சின்” தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி..!

Scroll Down To Discover
Spread the love

இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக் – வி’ ஆகிய மூன்று தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.

இதில், கோவாக்சின் தடுப்பூசியை தெலுங்கானாவின் ஐதரா பாதை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து வினியோகித்து வருகிறது.கோவாக்சின் தடுப்பூசி 78 சதவீத செயல் திறன் வாய்ந்தது என, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இது பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.இந்நிலையில், கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பின் அனுமதி இந்த வாரம் கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த அனுமதியை பெறுவதன் வாயிலாக, மேலும் பல நாடுகளுக்கு கோவாக்சின் ஏற்றுமதி செய்யப்படும். அதோடு, கோவாக்சின் போட்டுக் கொண்டவர்கள் வெளிநாடு பயணம் மேற்கொள்வதில் உள்ள சிக்கல்களும் நீங்கும் என்றும் கூறப்படுகிறது.