நடிகர் சூரி இல்ல திருமண விழாவில், மணமகள் அறையில் புகுந்து நகை திருட்டு..!

Scroll Down To Discover
Spread the love

மதுரையில் திருமண மண்டபத்தில், மணமகள் அறையில் புகுந்து நகை திருடிய ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். மதுரையை சேர்ந்தவர் நடிகர் சூரி. இவர் சினிமாவில் காமெடி நடிகராக நடித்து வருகிறார்.

இவரது வீட்டு திருமணம் சிந்தாமணி பைபாஸ் ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. அப்போது, திருமணத்திற்கு. வந்த மர்ம நபர் ஒருவர், மணமகள் அறையில்புகுந்து ஒன்பதரை பவுன் நகைகளான கவர்னர் மாலை, நெக்லஸ் முதலியவைகளை திருடிச் சென்று விட்டார்.

இந்த திருட்டு தொடர்பாக, சூர்யபிரகாஷ், கீரைத்துரை போலீசில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப்பதிவு செய்து ,நகை திருடிய மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.