பயாலஜிக்கல்-இ’ நிறுவனத்தின் தடுப்பூசி : பரிசோதனைக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் அனுமதி

Scroll Down To Discover
Spread the love

ஆந்திர மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த பயாலஜிக்கல்-இ மருந்து நிறுவனம், கொரோனாவுக்கு எதிராக ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளது.

இந்த தடுப்பூசியை இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்டமாக மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்க இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் அனுமதி அளித்துள்ளது. இந்த தடுப்பூசி 5 முதல் 18 வயதிலான குழந்தைகளுக்கு செலுத்தி பரிசோதிக்கப்படும்.

கோபர்வேக்ஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசி, நாட்டில் 10 இடங்களில் பரிசோதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியின் 30 கோடி டோசுக்கு மத்திய அரசு முன்கூட்டியே ரூ.1,500 கோடியை செலுத்தி உள்ளது.

இந்தியாவில் குழந்தைகளுக்காக பரிசோதிக்கப்படுகிற 4-வது தடுப்பூசி இதுவாகும். ஏற்கனவே குழந்தைகளுக்காக பாரத் பயோடெக், இந்திய சீரம் நிறுவனம், ஜைடஸ் கேடிலா ஆகிய 3 நிறுவன தடுப்பூசிகள் பரிசோதிக்க அனுமதிக்கபட்டு இருக்கிறது.