மதுராவை சுற்றியுள்ள 7 தெய்வீகத்தலங்களில் இறைச்சி, மது விற்பனைக்கு தடை: முதல்வர் யோகி உத்தரவு..!

Scroll Down To Discover
Spread the love

கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாட மதுரா வந்த யோகி ஆதித்யநாத், கடவுள் ஸ்ரீகிருஷ்ணர் பிறந்ததாக கருதப்படும் ஜென்மபூமி கோயிலில் வழிபட்டார்.

பின்னர் ராம்லீலா மைதானத்தில் நடந்த கூட்டத்தில் யோகி பேசியதாவது: கடந்த 2017-ம் ஆண்டில் இங்குள்ள மக்கள் கோரிக்கையை ஏற்று, பிருந்தாவன் மற்றும் மதுரா மாநகராட்சிகள் இணைக்கப்பட்டன. இதனால், இங்குள்ள 7 தெய்வீகத்தலங்கள் புனித்தலங்களாகவும் அறிவிக்கப்பட்டது. இப்போது, அந்த 7 நகரங்களிலும் இறைச்சி, மாமிசம் விற்பதற்கு தடை விதிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது ஏற்கப்பட்டு, இந்த ஏழு நகரங்களிலும் இறைச்சி, மது விற்பனைக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த இரண்டையும் விற்பனை செய்பவர்கள் மீது நகர நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும். இந்த இரண்டையும் விற்பனை செய்தவர்களுக்கு மறுவாழ்வு திட்டத்தின் கீழ் வேறு வருமானத்திற்கு வகை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

முதல்வர் அறிவித்த 7 நகரங்களின் பட்டியலில் மதுரா மாவட்டத்தில் உள்ள மதுரா, பிருந்தாவன், கோவர்தன், நந்த்காவ்ன், பர்ஸானா, கோலம், மாஹாவன் மற்றும் பல்தேவ் ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன.